×

பொடவூர் கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

பெரும்புதூர், ஜன. 10: பொடவூர் கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி முகாமினை பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பெரும்புதூர் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பெரும்புதூர் ஒன்றியம், பொடவூர் கிராமத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா ரவி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி ஜெயவேல் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் பொடவூர் ரவி, பெரும்புதூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் ராஜகிரி, வேளாண்மை அலுவலர் சங்கீதா, உதவி பேராசிரியர் புவிலா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் புவனா, உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளமன் ஆகியோர் கலந்துகொண்டு, இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இம்முகாமில், வார்டு உறுப்பினர்கள் சவுந்தரி மூர்த்தி, குமார், திமுக நிர்வாகிகள் சந்திரன், குணசேகரன், பிரகாஷ், அசோக், ராம்நாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பொடவூர் கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Farming ,Podavoor Village ,Union Committee ,President ,Karunanidhi ,District Agriculture ,Farmer Welfare Department ,Union ,Organic Farming Training Camp ,
× RELATED தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில்...